இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் கடந்த மாதம் 28-ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டு, ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சுலாவெசி மாகாணத் தலைநகரான பாலூவும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகக் கடுமையான பாதிக்கப்பட்டன.
இந்தோனேஷியாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ நெருங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆயிரம் பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.இடிபாடுகளில் இன்னும் மீட்கப்படாமல் உள்ள ஏராளமான உடல்கள் அழுகி வருவதால், அந்தப் பகுதிகளில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Post a Comment