தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் நேற்று (05) வெளியான பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் அனுப்பி வைக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.பாடசாலை அதிபர்களின் ஊடாக இதற்காக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுபற்றிய மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள 1911 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்குமாறும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment