நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் பி.ப 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல், மத்திய, வடமத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மி.மீக்கும் அதிகமான மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment