ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசிரமைப்பு நடவடிக்கைகளின் போது அதன் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவுக்கு அதிக பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தியதாகவும் கட்சியின் பொறுப்புக்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் அரசியல் சபைக் கூட்டத்தின் போது கட்சியின் மாற்றங்கள் குறித்த பல சமிக்ஞைகள் வெளிப்பட்டதாகவும், இது கட்சியின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment