நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலையினால் இதுவரையில் 237,940 குடும்பங்களை சேர்ந்த 803,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐவர் பேர் பலியாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.இவை தவிர மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1,046 வீடுகள் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளதாகவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில தினங்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால், மண் சரிவு அபாயம், இடி, மின்னல் தாக்கம் என்பவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் நிலையம் மக்களைக் கேட்டுள்ளது.
Post a Comment