Ads (728x90)

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகின் பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி-மிமிக்ரி கலைஞர் அனூப்  இருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயகிக்கப்பட்ட நிலையில், அவரது திருமணம் வைக்கோமில் உள்ள கோவில் ஒன்றில் இன்று மிக எளிமையாக நடந்தது.

கேரள மாநிலம் வைக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயலக்‌ஷ்மி. செல்லுலாய்ட் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமான இவர் மலையாளம், தமிழ் திரையுலகில் பல பாடல்களை பாடியுள்ளார். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை கலைஞராகவும் விஜயலக்‌ஷ்மி திகழ்ந்தார்.

 இந்தநிலையில் விஜயலட்சுமி-அனூப் இருவரின் திருமணமும் எளிமையான முறையில் இன்று நடைபெற்றது. இதனை விஜயலட்சுமி தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.

கேரள அரசின் சிறந்த பாடகர் விருதையும் வைக்கம் விஜயலக்‌ஷ்மி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget