Ads (728x90)

வடக்கு-கிழக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளை இவ்வருட இறுதிக்குள் விடுவிக்க பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாகாண ஆளுநர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் வழங்கும் நடவடிக்கையை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறும் ஜனாதிபதி ஆளுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்கான மாகாணசபை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பில் நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ஆளுநர்களுக்கு இப்பணிப்புரையை வழங்கியுள்ளார். இக்கலந்துரையாடலில் மாகாணங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் மாகாண சபைகளின் நிதி மற்றும் பௌதீக வளங்களின் முன்னேற்றம், வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதன்போது ஜனாதிபதி கிராம மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குத் தனது பூரண பங்களிப்பை தருவதாக வாக்குறுதியளித்தார்.

வறுமையை ஒழிக்க செயற்படுத்தப்டும் முக்கிய திட்டமான 'கிராம சக்தி' தேசிய திட்டத்தின் நோக்கத்தை சரியான முறையில் நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget