மன்னார்−மதவாச்சி பிரதான வீதி முருங்கன் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமிருந்த பொது மக்களின் 4 ஏக்கர் காணி இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த இராணுவ முகாம் கடந்த 2006 ஆம் ஆண்டளவில் முருங்கன் பகுதியில் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக சுமார் 12 வருடங்கள் இராணுவம் வசமிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை முகாம் முழுதாக அகற்றப்பட்டு இக்காணி மக்களுடைய பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
மேலும் மன்னார் - திருக்கேதீஸ்வரம் மாந்தையில் இராணுவத்தின் வசமிருந்த 5 ஏக்கர் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளும் புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment