Ads (728x90)

மாகாண சபைகள் எல்லை நிர்ணய மறுசீரமைப்பு அறிக்கை இரண்டு மாதங்களில் அறிவிக்கப்பட உள்ளதாக மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையின் மறுசீரமைப்பிற்காக பிரதமர் தலைமையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு இரண்டு மாத காலத்தில் மறுசீரமைப்பு அறிக்கையை அறிவிக்குமென திரு.பத்மசிறி தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த அறிக்கை வெளியிடப்படும் திகதி தொடர்பாக உறுதியாக கூற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ காலப்பகுதி அண்மையில் நிறைவடைந்துள்ளது.  இந்நிலையில் எல்லை நிர்ணய மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget