Ads (728x90)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என்று தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அரசியல் கைதிகளை சம்பந்தமான விசாரணைகள் சரியாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

கைதிகளுக்கு கட்டைய வழங்கியவர்கள் வௌியில் இருப்பதாகவும், அப்பாவி மக்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget