நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி தொடர்பான யோசனையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையில் குறிப்பிட்ட அபிவிருத்தி திட்டத்தினை இந்தியாவிடம் கையளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனை ஆமோதித்து பிரதமரும், சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவீரவும் குறிப்பிட்ட அபிவிருத்தி திட்டத்தினை இந்தியாவிடம் கையளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பிரதமரின் கருத்தினை ஏற்றுக் கொள்ளாத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடற்கரை துறைமுகம் இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். துறைமுகங்களை கடற்பரப்பினை வெளிநாடொன்றிற்கு வழங்கினால் இலங்கை தனது இறைமையை இழக்கவேண்டியிருக்கும் எனவும் சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவை சேர்ந்த நாடொன்றிற்கு வழங்கியமை குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ள சிறிசேன இது குறித்து இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும், தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் எந்த எதிர்ப்பையும் வெளியிடவில்லை எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதனை நிராகரித்த பிரதமர் இந்தியாவிலிருந்தே பெருமளவு கொள்கலன்கள் இலங்கைக்கு வருகின்றன. இதன் காரணமாகவே இந்தியாவின் உதவியுடன் அதனை அபிவிருத்தி செய்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment