இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்று நேற்றைய தினம் பாதுகாப்பு பிரிவு பிரதானிகள் மற்றும் யாழ் மாவட்ட செயலாளர் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
இப்பேச்சுவார்த்தையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்.மாவட்ட பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றி, அக்காணிகளை விரைவாக சாதாரண மக்களுக்கு வழங்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் இங்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Post a Comment