அதற்கமைய பொதி செய்யப்படாத வெள்ளைச் சீனி கிலோ 100 ரூபா ஆகவும், பொதி செய்யப்படாத வெள்ளைச் சீனி கிலோ 105 ரூபா ஆகவும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள் இரண்டின் அடிப்படையில் விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், வழங்குனர்கள் மேற்குறித்த உச்சபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக விற்பனை செய்யக்கூடாது என அதிகாரசபை அறிவித்துள்ளது.
அத்துடன் எந்தவொரு இறக்குமதியாளரும் வெள்ளைச் சீனி கிலோவொன்றை ரூபா 92 இற்கு அதிகமாக விற்பனை செய்தல் அல்லது விற்பனைக்காக முன்வைத்தல் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது என அதிகார சபை அறிவித்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள உச்சபட்ச விலைகளை மீறி வெள்ளைச் சீனியை இறக்குமதி செய்யும், விற்பனை செய்யும் விற்பனைக்காக முன்வைக்கும், விற்பனைக்காக காட்சிப்படுத்தும், விற்பனைக்காக விநியோகிக்கும் வர்த்தகர்கள், விநியோகஸ்தர்கள், வழங்குனர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Post a Comment