Ads (728x90)

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனை உச்ச நீதிமன்றத்தால் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தால் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து துமிந்த சில்வா உட்பட பிரதிவாதிகள் நால்வரினால் தமது தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதியரசர்கள் குழுவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget