அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் ஆகியோரை சந்தித்த தமிழ் அரசியல் கைதிகள் இதனை தெரிவித்துள்ளனர்
எதிர்வரும் 17 ம் திகதி அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஜனாதிபதியிடமிருந்து வெளிவரும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்குறுதியளித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் 17 ம் திகதி வரை தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக தமிழ் அரசியல் கைதிகள் அவர்களை சந்தித்த அருட்தந்தை சக்திவேல் அடங்கிய குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அருட்தந்தை சக்திவேல் பழரசத்தை வழங்கி உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். இதேவேளை கூட்டமைப்பு வாக்குறுதியளித்தபடி ஜனாதிபதியிடமிருந்து உறுதியான முடிவு எதிர்வரும் 17 ம் திகதி புதன்கிழமை வெளிவரா விட்டால் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்

Post a Comment