Ads (728x90)

யாழ்.அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதிவான் அச்சுவேலி பத்தமேணி சூசையப்பர் வீதியில் மின்சார கம்பம் நடுவதற்காக நிலத்தை தோண்டியபோது அங்கிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து அச்சுவேலி பொலிஸாருக்கு  தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் ஏ.ஆனந்தராசா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். சட்ட வைத்திய அதிகாரி மயூரதனும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

இன்றைய தினமும் தோண்டப்பட்டபோது மேலும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் ஆய்விற்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget