Ads (728x90)

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி அனுராதபுரம்  சிறைச்சாலைக்கு கால்நடை பவனியை மேற்கொண்ட யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி கடந்த ஒன்பதாம் திகதி கால்நடை பேரணியை ஆரம்பித்த யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இன்று அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைந்தனர்.
இவ்வாறு அனுராதபுரம் சிறைக்கு சென்ற மாணவர்களில் சிலருக்கு அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய மாணவர்கள் சிறைச்சாலைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். அரசியல் கைதிகளின் விவகாரத்தில் நல்லிணக்க அரசாங்கத்தின் போக்கை கண்டித்து அவர்கள் கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget