Ads (728x90)

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் என்ற வகையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையினால் இனிவரும் காலங்களில் முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவரும், இலங்கை தொழில் வழங்குனர் சம்மேளனத்தின் தலைவருமான ரொஷான் இராஜதுறை தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற முதலாளிமார் சம்மேளனத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது. கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈபடுவது கூட்டு ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். அத்துடன் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget