மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சந்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சந்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலேயே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
மிசோரம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. மிஜோ தேசிய முன்னணி (எம்.என்.எப்) ஆட்சி அமைக்க உள்ளது. மிசோரமில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 110 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 111 தொகுதிகளிலும் ஏனைய வேட்பாளர்கள் 09 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 74 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 98 தொகுதிகளிலும் ஏனைய வேட்பாளர்கள் 27 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
சந்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 67 தொகுதிகளிலும் ஏனைய வேட்பாளர்கள் 06 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 இடங்களில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்கள் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். ஏனைய வேட்பாளர்கள் 08 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 இடங்களில் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி வேட்பாளர்கள் 87 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 19 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர் ஒரு தொகுதியிலும் தெலுங்கு தேசம் 2 தொகுதிகளிலும் ஏனைய வேட்பாளர்கள் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மத்தியில் பாஜக தலைமையிலான அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிகிறது. இதையடுத்து அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு மெகா கூட்டணி அமைக்க முயன்று வருகின்றன.

Post a Comment