இந்தோனேசியாவின் அனக் கிரக்காட்டு எரிமலைக்கு அருகில் உள்ள கரையோர கிராமங்களை மீண்டும் சுனாமி தாக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சனிக்கிழமை சுனாமிதாக்கியதன் காரணமாக 281 பலியாகியுள்ள நிலையிலேயே அதிகாரிகள் மீண்டுமொரு சுனாமி தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எரிமலை வெடித்தன் காரணமாக கடலுக்கு அடியில் ஏற்பட்ட அதிர்வுகளே பாரிய சுனாமிக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளதை தொடர்ந்து சுனாமி ஆபத்து குறித்து பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எரிமலை வெடிப்பு தொடர்வதால் மற்றொரு சுனாமிக்கான வாய்ப்புகள் உள்ளன என இந்தோனேசியாவின் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் கடற்கரையோரங்களில் நடமாடக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் ஆழிப்பேரலை ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் அனாக் க்ரகடோ (Anak Krakatau ) எரிமலையில் மீண்டும் குமுறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் சுனாமி ஏற்படலாம் என்பதால் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷிய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு சுனாமிப் பேரலை தாக்கியதில், குறைந்தது 222 பேர் உயிரிழந்ததோடு, 843 பேர் காயமடைந்தனர்.
அனாக் க்ரகடோ (Anak Krakatoa) எரிமலை வெடிப்பால், கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கமே இந்த ஆழிப்பேரலை ஏற்படுவதற்கான பிரதான காரணமாக இருக்கலாம் என இந்தோனேஷிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை வேளையிலும் குறித்த எரிமலை குமுறியுள்ளது.
ஆழிப்பேரலையின் தாக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜொக்கோ விடோடா, தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment