பாடசாலை வவுச்சர்களின் காலாவதியாகும் திகதி எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 31 ஆம் திகதி நிறைவடையவிருந்த மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களின் கால எல்லையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை நிறைவடையும் முன்னர் சீருடை வவுச்சர்களை விநியோகிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு அவர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு நாடு முழுவதுமுள்ள 40 இலட்சம் மாணவர்களுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment