இன்றும், நாளையும் மழையுடன் கூடிய காலநிலை தீவிரம் அடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் தாக்கம் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் கூடுதலாக இருக்கும். கிழக்கு, வடக்கு, வடமத்திய, மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.
பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யலாம் என திணைக்களத்தின் இன்றைய தினத்திற்கான வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காலை நேரத்தில் சில இடங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நீடிக்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment