கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தினரின் நல்லிணக்க கேந்திர நிலைய மண்டபத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய 40 ஏக்கர் காணிகளுக்கான ஆவணங்கள் கிளிநொச்சி அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஏக்கர் காணிக்குரிய ஆவணங்கள் முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடமும் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரால்ப் நுகரவினால் கையளிக்கப்பட்டன.
விடுவிக்கப்பட்ட முல்லைத்தீவு காணிகள் எதிர்வரும் 27ந்திகதி வட மாகாண ஆளுநர் மூலம் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என முல்லைத்தீவு அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் கிளிநொச்சியிலும் விரைவில் குறித்த இக்காணிகளை ஆளுநர் மூலம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளிநொச்சி அரச அதிபரும் தெரிவித்துள்ளார்.

Post a Comment