S13 என்னும் பெயர் குறித்த மேற்படி புகையிரதம் காங்கேசன்துறை-கொழும்பு புகையிரத மார்க்கத்தில் உத்தரதேவி சேவையாக இடம் பெறவுள்ளதாகவும், வழமையாக உத்தரதேவி சேவையில் ஈடுபட்டுவரும் சிவப்பு நிற புகையிரதம் வேறு மார்க்கத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இப்புதிய புகையிரதம் இன்று பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. கொழும்பிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த புதிய ரயில் இன்று மாலை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை சென்றடைந்தது.
இதேவேளை 10 புதிய ரயில் எஞ்சின்கள் மற்றும் புகையிரத பெட்டிகளை இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் இந்த புகையிரதம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள புகையிரத பெட்டிகளில் குளிரூட்டப்பட்ட புகையிரத பெட்டி மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான கழிவறை வசதிகள் கொண்டவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பரீட்சார்த்த சேவையின் பின்னர் ஏனைய எஞ்சின்கள் மற்றும் பெட்டிகளை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமென புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Post a Comment