சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையானது சட்டவிரோதமான செயல் எனத் தெரிவித்து இலங்கையின் அதி உச்ச நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பொன்றினை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.
நலின் பெரேரா, பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன, புவனேக அலுவிகாரே, விஜித் மலல்கொட, சிசிர டி ஆப்று, மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இந்த வரலாற்றுத் தீர்ப்பினை வெளியிட்டுள்ளது.
ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் கடந்த டிசெம்பர் 4 ஆம் திகதி முதல் ஏழாம் திகதி வரையிலான நான்கு நாட்களாக ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையிலேயே டிசெம்பர் 13 ஆம் திகதி அதாவது நேற்று உச்ச நீதிமன்றம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று தெரிவித்து தீர்ப்பை அறிவித்திருக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment