2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றில் சமர்பிப்பிக்கப்படவுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான முதல் நான்கு மாதங்களுக்காக 1,765 பில்லியன் ரூபா அரச செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை பதவியேற்றதை அடுத்து நேற்று நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் சமர்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி அமைச்சு அலுவலகத்தில் நேற்று அமைச்சுப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மங்கள மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment