கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேரில் சென்று பார்வைிட்டுள்ளார். அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிவமோகன், அமைச்சின் செயலாளர், அரச அதிபர் ஆகியோரும் சென்றிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருபது நலன்புரி நிலையங்களில் இரண்டிற்கு விஜயம் மேற்கொண்டு மக்களுடன் கலந்துரையாடியதோடு, அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வைத்துள்ளார்.
வெள்ள அனர்த்தம்காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் கோரிய நிதி விடுவிக்கப்பட்டு மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்படும் என முகாமைத்துவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் வெள்ள அனர்த்தம் தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆராயும் விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெள்ளம் அனர்த்தம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளோம், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகள் மற்றும் அவசர உதவிகள் குறித்த கலந்துரையாடப்பட்டது. இதன் போது மக்களுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதும் அதற்கான நட்டஈடுகள் வழங்கப்படும். அதற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்கள் கோருகின்ற நிதி விடுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment