வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட மக்களுக்காக ஐ.பி.சி தமிழ் உறவுப்பாலத்தின் மூலம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ள அனர்த்தம் நிகழ்ந்ததன் பின்னர் துரிதமாக செயற்பட்ட ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பு மக்களுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
தாயகத்திலிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பெருமளவு மக்கள் கையளித்த அத்தியாவசியப் பொருட்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளித்து வருகின்றது.
இதன்படி தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருக்கும் மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலர் உணவுப் பொருட்கள் மற்றும் விசேட தேவையுடைய பொருட்கள் என்பவற்றை யாழ்ப்பாணக் கலையகத்தில் கையளித்துள்ளனர்.
அதனடிப்படையில் எதிர்வரும் இரண்டாம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளதால் மாணவர்களின் கல்விக்குத் தேவையான உபகரணங்களை விசேடமாகச் சுமந்தவாறு இன்று நான்காவது நாளாகவும் இந்த நிவாரணப்பணி இன்றைய நாள் முன்னெடுக்கப்படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment