ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயார் என பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேன இணங்கியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதில்லை என முன்னர் உறுதியாக தெரிவித்திருந்த போதிலும் தற்போது ரணிலை நியமிப்பதற்கு அவர் இணங்கியுள்ளமை குறித்து நான் ஆச்சரியப்படவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது ஜனாதிபதியின் உண்மையான குணாதிசயத்தை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கத்தை விரும்பாத சிலர் ஜனாதிபதியை தவறாக வழிநடத்தினர் இதன் காரணமாகவே அவர் பிரதமரை நீக்கினார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எனினும் தற்போது உண்மை தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment