வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே இதனை குறிப்பிட்டார்.
வெள்ள அனர்த்தத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தொடர்ந்து எதிர்வரும் மூன்று தினங்களுக்கு தங்கவைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொழும்பு மாநகர சபையால் நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இரண்டு வாரங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதற்கான ஆளணி பற்றாக்குறை நிலவும் பட்சத்தில் அதற்கு படையினரை அழைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான ரிசாட் பதியூதீன், ரஞ்சித் மத்தும பண்டார, தயா கமகே, ஜே.சி. அலவத்துவல, இராஜாங்க அமைச்சர்களான விஜயகலா மகேஸ்வரன், ஹரிசன் டீ சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், டக்ளஸ் தேவானந்தா, சரவணபவன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவமோகன் வடமாகாண ஆளுநர், ரெஜினோல்ட் குரே, பொலிஸ்மா அதிபர், இராணுவ உயர் அதிகாரிகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்கள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment