2019 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய தினங்கள் குறித்து ஓய்வூதியத் திணைக்களம் சுற்று நிருபம் மூலம் அனைத்து ஓய்வூதியக்காரர்களுக்கும், வங்கிகளுக்கும் அறிவித்துள்ளது.
ஜனவரி – 10, பெப்ரவரி – 08, மார்ச் - 08, ஏப்ரல் - 08. மே - 10, ஜுன் - 10, ஜுலை - 10, ஓகஸ்ட் - 09, செப்ரெம்பர் - 10, ஒக்டோபர் - 04, நவம்பர் - 08, டிசெம்பர் - 10 ஆகிய தினங்களில் ஓய்வூதியத்ததைப் பெற்றுக் கொள்ளலாம் என ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ. ஜகத் டி டயஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்று நிருபத்தின் பிரதிகள் ஜனாதிபதி செயலகம், பிரதமரின் செயலாளர், பொது நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, கணக்காய்வாளர் நாயகம், அரச கணக்குகள் பணிப்பாளர் நாயகம், தபால் மா அதிபர், அனைத்து வங்கிகளினதும் தவிசாளர்கள் மற்றும் ஓய்வூதிய சங்கங்கள் ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஓய்வூதியம் பெறுவோர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியகாரர்கள் தமது பிரதேச செயலகங்களில் இதற்கான விண்ணப்ப பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும். ஓய்வூதிய திணைக்களத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
மார்ச் மாத இறுதிக்கு முன்னர் இந்த உறுதிப்பத்திரத்தை ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழை சமர்ப்பிக்க தவறும் ஓய்வூதியகாரர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு இடைநிறுத்தக் கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment