Ads (728x90)

வட மாகாணத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி சீரற்ற காலநிலையால் வீடுகளை இழந்த பாடசாலை மாணவர்களுக்கு மேலதிகமாக சீருடைகள் மற்றும் பாதணிகளைப் பெற்றுக்கொள்ளும் வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாடப்புத்தகங்கள் சேதமடைந்திருந்தால், அதற்கு பதிலாக புதியு புத்தகங்களை வழங்குவதற்கும் செயற்படுமாறு கல்வியமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget