Ads (728x90)

ஊழல், மோசடி, இலஞ்சம் அற்ற தூய்மையான அரசாங்கம் ஒன்றினை அமைத்து மக்களோடு மக்களாக இணைந்து வியர்வை சிந்தி பயணிப்பதற்கு தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியினால் நேற்று காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனநாயகத்திற்கான வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதேவேளை பிரதமராக பதவியேற்றுக் கொள்ளும்படி பல சந்தர்ப்பங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் நாம் அதற்கு இணங்கவில்லை. காரணம் பணம், பதவி மற்றும் அதிகாரம் என்பவற்றை விட விசுவாசம் என்பது மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget