வடக்கில் சீரற்ற காலநிலை காரணமாக ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கூடுதலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரணைமடுக் குளத்தில் 14 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. முத்தையன் கட்டுக்குளம் மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களில் தலா இரண்டுவான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு–திருகோணமலை, முல்லைத்தீவு–அனுராதபுரம் மற்றும் புத்தளம் - மன்னார் பழைய பாதை உள்ளிட்ட பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து வில் பத்துகாட்டின் ஊடாகச் செல்லும் புத்தளம் - மன்னார் பழைய பாதையில் எலுவாங்குளம், குறொஸ்வே சப்பாத்துப் பாலத்திற்கு அருகில் பாதை மூடப்பட்டிருப்பதாக புத்தளம் அனர்த்தமுகாமைத்துவப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.என்.கே.அழகக்கோன் தெரிவித்தார்.
இந்தப் பாதையில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பலர் இடைநடுவில் நிர்க்கத்திக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். சுற்றுலாவிற்காக இரத்தினபுரி, பெல்மடுல்லவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்று கொண்டிருந்தவர்களே விபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கிளிநொச்சியில் வெள்ளம் காரணமாக பலர் இடம்பெயர்ந்துள்ளனர். ஏ-9 பாதையில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மாங்குளத்திற்கும் கிளிநொச்சிக்கும் இடையில் ஒருகுளம் உடைப்பெடுத்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
1977 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இரணைமடுக்குளம் நிரம்பிவழிவதால் பன்னன்கண்டி, இரத்தினபுரம், ஆனந்தபுரம், பொன்நகர், பெரியகுளம், தம்பிராசபுரம், உலவனூர் ஆகிய கிராமங்கள் நீரில்மூழ்கியுள்ளன. இந்தக் கிராமங்களில் 300 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன வடமாகாணத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை இன்று குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment