இந்தோனேசியாவை தாக்கியுள்ள பூமியதிர்ச்சி மற்றும் சுனாமியினால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் இலலையென இலங்கை வானிலை அதிகாரி திருமதி உதேனி வீரசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் எதுவித சுனாமி முன்னெச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அதனால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் உள்ள கடற்கரை பகுதியான சுந்தா ஸ்ட்ரேய்ட் பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.27 மணிக்கு திடீரென சுனாமி அலை தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பாண்டேக்லாங்க், செராங் மாவட்டங்களும் உள்ளானது. இதில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 550 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 430 வீடுகள், 9 ஹோட்டல்கள், 10 படகுகள் சேதமடைந்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment