Ads (728x90)

வடமாகாணத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிலை படிப்படியாக குறைந்து வருகின்றது.

இந்த வெள்ள அனர்த்தத்தினால் வடக்கில் 22,823 குடும்பங்களைச் சேர்ந்த 73,343 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பபாளர் பிரதிப் கொடிப்பிலி நேற்று மாலை தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 7018 குடும்பங்களைச் சேர்ந்த 22,608 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் 708 பேர் தற்சமயம் நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார். வவுனியா மாவட்டத்தில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 85 பேரும் இடைத்தங்கல் முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தினால் கூடுதலாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார்

Post a Comment

Recent News

Recent Posts Widget