Ads (728x90)

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் புலம்பிக் கொண்டிருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் சம்பந்தனின் புலம்பல் சரியா? பிழையா? என்பதை அவரின் மனச்சாட்சியே சொல்லட்டும். நாங்கள் அவருடன் முரண்பட விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் நான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராகவே தொடர்ந்து செயற்படுகின்றேன்.

தற்போது எதிரணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை நாம் பெற்றுள்ளோம்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவி எம்மைத் தேடி வந்தது. எவரிடமும் மண்டியிட்டு இந்தப் பதவியை நாம் பெறவில்லை. எல்லாவற்றுக்கும் ஆமாம் போட்டு அடிமைகளாக இருக்க நாம் விரும்பவில்லை. பலமான எதிர்க்கட்சியாக திகழ்வோம் என கூறியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget