
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தில் தனக்கு வழங்கப்படவிருந்த அமைச்சு பதவியை வழங்காமைக்கு எதிராக இந்த வழக்கை பொன்சேகா தொடரவுள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் விடுமுறை முடிந்து உயர் நீதிமன்றத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பித்த உடன் இந்த மனுவை தாக்கல் செய்ய பொன்சேகா தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தனிப்பட்ட விரோதத்திற்காக சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவியை வழங்கவில்லை என்பது உறுதியாகியுள்ளதால், அது அடிப்படை உரிமை மீறல் என்பது தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சட்டத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சரத் பொன்சேகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்து வருவதால் அவரை தான் அமைச்சராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி கூறியிருந்தார்.
புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்ட போதிலும் சரத் பொன்சேகாவுக்கு அமைச்சு பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment