புதிய அமைச்சர்களின் பெயர் விபரங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.இன்றைய தினம் பிற்பகல் வேளையில் ஜனாதிபதியிடம் 30 பேரை கொண்ட அமைச்சர்களின் பெயர் விபரங்கள் ஒப்படைக்கப்படும் என ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட உள்ள அமைச்சுக்கள் மற்றும் துறைகள் உள்ளிட்ட விபரங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலுக்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.
Post a Comment