
ரஜினி, த்ரிஷா, சிம்ரன், நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் பேட்ட வருகிற பொங்கல் அன்று வெளிவருகிறது.
இந்தப்படத்தின் உலக வெளியீட்டு உரிமத்தை, மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷன் என்ற நிறுவனம் வாங்கி உள்ளது. இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் சுமார் ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் இந்த நிறுவனம், கபாலி, தெறி, பிச்சைக்காரன், திமிரு பிடிச்சவன், மொட்ட சிவா கெட்ட சிவா, விஐபி 2, துப்பாக்கிமுனை உள்ளிட்ட படங்களையும் உலக நாடுகளில் வெளியிட்டது.
விரைவில் திரைக்கு வரவுள்ள 'அடங்கமறு' படத்தினையும் இந்நிறுவனமே வெளியிடவுள்ளது. ”இந்தியாவில் வெளியாகும் அன்றே உலக நாடுகளிலும் திரையிட இருக்கிறோம். இதற்கான வெளிநாட்டு புரமோசன் பணிகளை தொடங்கிவிட்டோம்" என்கிறார் மாலிக் ஸ்ட்ரீம் நிறுவன உரிமையாளர் டத்தோ மாலிக்.
Post a Comment