ராகுலை பிரதமராக்குவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சென்னையில் நேற்று (டிச.16) நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ராகுலை பிரமராக்குவோம். பா.ஜ., வீழ்த்தும் திறமை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளரான ராகுலுக்கு உண்டு என குறிப்பிட்டார். லோக்சபா தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து வரும் நிலையில், ஸ்டாலின் இந்த பேச்சு கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி பேசிய எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள மூத்த தலைவர் ஒருவர், ஸ்டாலின் பேசி உள்ளது எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்திற்கு எதிராக உள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பிறகே பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்திருக்கும் நிலையில் ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளது ஏற்ற முடியாதது என்றார். சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் ஸ்டாலிலின் பேச்சால் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சமாஜ்வாதி, தெலுங்குதேசம், திரிணாமுல் காங்., பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஸ்டாலினின் இந்த பரிந்துரையை ஏற்க மறுத்து, அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்து, பிறகு தேர்தலை எதிர்கொள்ளும் முடிவை காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ராகுலை முன்னிறுத்தி ஸ்டாலின் பேசி உள்ளது எதிர்க்கட்சிகள் கூட்டணியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment