2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பில் உள்ள படமாக 'விஸ்வாசம்' இருக்கிறது. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாவது பார்வை வெளிவந்த போது அது பலத்த விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால் மோஷன் போஸ்டர் வந்த போது அஜித் ரசிகர்கள் அதைக் கொண்டாடினார்கள். ஒரு மோஷன் போஸ்டரையே யு டியூப் சாதனைப் பட்டியலில் முதல் முறையாக சேர்த்து விட்டார்கள். அந்த மோஷன் போஸ்டர் இதுவரை 96 லட்சம் பார்வைகளையும், 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.
அடுத்து வெளியான முதல் சிங்கிளான 'அடிச்சி தூக்கு' பாடல் 1 கோடி பார்வைகளைத் தொட உள்ளது. இரண்டாவது சிங்கிளான 'வேட்டிக்கட்டு' பாடல் 40 லட்சம் பார்வைகளைத் தொட உள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
'விஸ்வாசம்' டீசரை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment