2,943 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு 340,507 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிங்கள மொழி மூலம் 255,062 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 85,446 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்தது. எனினும் கொவிட்-19 தொற்றுப் பரவலால் ஒத்தி வைக்கப்பட்டது.
இதேவேளை கொவிட்-19 தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு வசதியாக 108 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Post a Comment