Ads (728x90)

12 ஆவது தடவையாக யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சந்தை எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

இதற்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து எல்.ஈ.சி.எஸ். நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில் சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் யாழ்ப் பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன.

இக்கண்காட்சியில் தமது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்த உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு காட்சிக்கூடங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களை தேசியரீதியில் எடுத்துச் சென்று சர்வதேச தரம் வாய்ந்த உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு குறித்த கண்காட்சி அமையும் என யாழ்.வர்த்தக தொழில்துறை மன்றத்தின் உபதலைவர் கு.விக்னேஷ் தெரிவித்துள்ளார். 

குறித்த கண்காட்சியை பாடசாலை மாணவர்கள் மற்றும் 10 வயதுக்கு குறைந்த சிறுவர் சிறுமிகள் இலவசமாக பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஏனையவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம் அறவிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget