Ads (728x90)

இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்களும் இன்று நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த வருடம் டிசம்பரில் கைதான சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கும் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்களது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 05 வருட காலத்தில் மீண்டும் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.

இந்திய மீனவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget