Ads (728x90)

தரமின்மை காரணமாக நிராகரிக்கப்பட்ட உரத்தை இலங்கைக்கு கொண்டுவந்த சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சேதன உரம் உரிய தரத்தில் இல்லாத நிலையில் அதனை அரசாங்கம் நிராகரித்திருந்தது. இதனால் குறித்த உரம் கப்பலில் இருந்து இறக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது.

எனினும் இதற்கான கட்டணத்தை இலங்கை வழங்க வேண்டும் என்று சீன உர நிறுவனம் வலியுறுத்தி வந்தது.

குறித்த நிறுவனத்துக்கு கட்டணத்தை செலுத்துவதற்காக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடை அண்மையில் நீக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த சீன உர நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய 6.9 மில்லியன் டொலர்கள் நேற்று செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் பணம் செலுத்தாததால் சீன தூதரகத்தால் இலங்கை மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.



Post a Comment

Recent News

Recent Posts Widget