Ads (728x90)

திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கையில் இந்தியாவும், இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. 

இந்த உடன்படிக்கை நேற்று மாலை கைச்சாத்திடப்பட்டதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் மற்றும் ரின்கோ பெற்றோலியம் டர்மினல் பிரைவட் லிமிட்டட் ஆகிய தரப்பினர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். 

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் தற்போது பயன்படுத்தப்படுகின்ற 14 எரிபொருள் தாங்கிகளை அதே நிறுவனத்திற்கு வழங்க இந்த உடன்படிக்கையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐ.ஓ.சி நிறுவனத்தினால் பயன்படுத்தப்படுகின்ற 14 எரிபொருள் தாங்கிகள் 50 வருடங்களுக்கு அதே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 61 எரிபொருள் தாங்கிகளை இலங்கை மற்றும் இந்தியா இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு உடன்படிக்கையின் ஊடாக இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி 51 சதவீத பங்குகள் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கும், 49 சதவீத பங்குகள் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திற்கும் உரிமையாக்கும் விதத்தில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்த வகையில் இயங்குவதற்காக ரின்கோ பெற்றோலியம் டர்மினல் பிரைவட் லிமிட்டட் என்ற பெயரில் நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் அதனூடாகவே இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.



Post a Comment

Recent News

Recent Posts Widget