பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள விதத்தினை கடுமையாக சாடியுள்ள கர்தினால் அதிகாரிகள் உண்மையை தெரிவிப்பதற்கு பதில் கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
கைக்குண்டு மீட்கப்பட்ட தினத்தின் சிசிடிவியை அதிகாரிகள் முழுமையாக ஆராயவில்லை பகல் மூன்று மணிமுதல் பதிவாகியுள்ள விடயங்களையே ஆராய்ந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அன்று காலை முதல் பதிவான விடயங்களை ஆராயவில்லை. காலை முதல் சிசிடிவியில் பதிவான விடயங்களில் சந்தேகத்திற்கு இடமான விடயங்கள் உள்ளன எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.
காலையில் பதிவான சிசிடிவி காட்சிகளில் சந்தேகத்திற்கு இடமான விதத்தில் நபர் ஒருவர் செயற்படுவது பதிவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிசிடிவியில் காணப்படும் சந்தேகத்திற்குரிய நபர் குறித்து விசாரணை செய்யாமல் தேவாலயத்தினை சுத்திகரிப்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உண்மையை கண்டுபிடிப்பதற்கு பதில் அவர்கள் கதையொன்றை திட்டமிட்டு பரப்புகின்றனர் என கர்தினால் தெரிவித்துள்ளார்.
Post a Comment