Ads (728x90)

நாடளாவிய ரீதியில் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக பிளாஸ்டிக் போத்தல்களை மீள் சுழற்சி செய்யும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

சதொச விற்பனை நிலையங்களில் ரூபா 35 விலையுடைய இந்தப் புதிய தண்ணீர் போத்தல்கள், விற்பனை நிலையங்களுக்குத் திரும்பும் போது ஒவ்வொரு போத்தலுக்கும் 10 ரூபா திருப்பிச் செலுத்தப்படும். நுகர்வோர் குறைந்த விலையில் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்து சுற்றுச்சூழலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக்கின் அளவைக் குறைப்பதே எமது  பிளாஸ்டிக் மீள் செயற்பாட்டின் நோக்கம் என அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் போத்தல்களைப் பயன்படுத்தும் அனைத்து உற்பத்தியாளர் களுக்கும் இது பெரும் முயற்சியாக அமையும்.  பிளாஸ்டிக் போத்தல்களைப் பயன்படுத்தும் அனைத்து உற்பத்தியாளர்களிடமும் இதை அமுல்படுத்த முடியும் என நம்புவதாகவும், பிளாஸ்டிக் சேகரிப்பானது மீள்சுழற்சி செய்வதை மிகவும் எளிதாக்கும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget