Ads (728x90)

இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை ஆகிய சேவைகள் 2021.08.30 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மூன்று சேவைகளாக்கும் விசேட வர்த்தமானியை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா வெளியிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் சேவை,ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைகள் 2021.08.30 ஆம் திகதி முதல் வெவ்வேறாக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட சேவைகளாக்கப்பட்டுள்ளன.

நியமனம், பதவி உயர்வு, ஒழுக்கம், இடமாற்றம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் விவகாரம் தொடர்பிலான அதிகாரம் மற்றும் விடயதானங்கள் அந்தந்த சேவைகளுக்காக தற்போது அதிகாரம் காணப்படும் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்தந்த சேவைகளுக்கு உரித்தான விசேட சம்பளம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

சேவை பிரிவு, தரம் மற்றும் தகுதி தொடர்பில் உரிய அதிகாரிகளினால் அனுமதிக்கப்பட்ட புதிய மானியங்களுக்கமைய சேவை யாப்பினை தயாரித்து வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடும் வரை அந்தந்த சேவைகளுக்காக தற்போது செயற்பாட்டில் உள்ள சேவை யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயதானங்கள் செயற்படுத்தப்படும் என வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.








Post a Comment

Recent News

Recent Posts Widget